அலிபாக் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது; 18 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: அலிபாக் கடற்கரையிலிருந்து 7 கி.மீ., தொலைவில் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்தது. படகில் இருந்த 18 பேரை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் கடற்கரையில் இருந்து 7 மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து இந்திய கடலோர படை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்திய கடற்படையின் விரைவான நடவடிக்கையால் படகில் இருந்த 18 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்டனர்.இந்த சம்பவம் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடற்படை அதிகாரிகளின் முயற்சியால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம்



தெற்கு மும்பையில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சாலையில், 57 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement