மனதிற்கு நிறைவை தந்த மகா கும்பமேளா



மகா கும்பமேளா, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் நடைபெற்றது. இந்த மாபெரும் ஆன்மிக நிகழ்வில், திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமம்) 68 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.

மகா கும்பமேளா என்பது 12 வருடத்திற்கு ஒரு முறை வரும் மகா மகா கும்பமேளா என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அந்த வகையில் இந்த கும்பமேளா அத்தகைய சிறப்பு வாய்ந்ததாகும்.
Latest Tamil News
ஊசிபாசிமணி விற்கும் பெண் பிரபலமானது,இரண்டு முறை தீ விபத்து நடைபெற்றது,நெரிசல் காரணமாக பலர் இறந்தது என்று பல சம்பவங்கள் இடைப்பட்ட நாட்களில் நடந்தேறியது.

இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதை பாக்கியமாக கருதி நாடு முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழக்கூடிய பக்தர்கள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளளரான அசோக் கேடியா இந்த கும்பமேளாவிற்கு சென்று வந்தவராவார்.

அவர் ஒரு புகைப்படக்கலைஞரும் கூட இதனால் தனது லக்கேஜ் பெட்டியில் முதலில் எடுத்து வைத்துக் கொண்டது கேமராவைத்தான்.

இவர் தன் அனுபவங்களாக கூறியதாவது..

முன்கூட்டியே அறைகள் பதிவு செய்து கொண்டு விமானம் மூலமாக கும்பமேளா சென்று வந்தேன்,தற்காலிக டெண்ட் அடித்து அறைகள் ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்குள் தேவையான வசதிகள் செய்திருந்தனர்.உணவும் பிரச்னை இல்லை.ஆனால் எங்கே போனாலும் நடந்துதான் போகவேண்டும் உள்ளூர் இளைஞர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தில் நடக்கமுடியாதவர்களை ஆற்றின் கரைவரை அழைத்துச் சென்று வந்தனர், இதை வணிக ரீதியாக செய்தவர்களும் உண்டு.
Latest Tamil News
திரும்பிய பக்கமெல்லாம் சாமியார்கள் தனி டெண்ட் அமைத்து தங்கியிருந்தனர், அங்கு அவர்களிடம் நிர்வாணம் என்பது புனிதமானதாகவே பார்க்கப்பட்டது, அனுமதி பெற்று புகைப்படம் எடுத்துக் கொள்ளாலம் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் அவரது தொண்டர்களால் தேவையற்ற பிரச்னை ஏற்படும்.
Latest Tamil News
கைகளை ஆண்டுக்கணக்கில் துாக்கியபடி நிற்கும் சாமியார்,விவரம் தெரிந்த நாளில் இருந்து முடிவெட்டாத சாமியார்,காரில் வந்த சாமியார்,குதிரையில் வந்த சாமியார் என்று பலவிதமான சாமியார்கள் அங்கு இருந்தனர் அவர்களில் பெண் சாமியார்களும் உண்டு.நாக சாதுக்கள் என்று அழைக்கப்படும் அவர்களை வணங்கி அவர்களது பாதங்களில் பக்தர்கள் பணத்தைக் கொட்டுகின்றனர் அப்படி கொட்டப்படும் பணத்தை எண்ணுவதற்காகவே சாமியார்கள் சிலரை நியமனம் செய்துள்ளனர்.
Latest Tamil News
ஆற்றுக்குள் பல கோடி ரூபாய் செலவில் பல தற்காலிக பாலம் அமைத்திருந்ததால் மக்கள் போகவர பிரச்னை எதுவும் இல்லை,நான் போயிருந்த போது நல்ல குளிர், காலை பத்து மணியானாலும் எதிரில் வருபவர்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனி கவிழ்ந்து இருந்தது, இந்த குளிரை எதிர்பாராமல் வந்த ஏழ்மையான பக்தர்கள் பலர் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர், நான் கம்பளி போர்வை வாங்கி பலருக்கும் தானமாக வழங்கினேன், மனதிற்கு நிறைவாக இருந்தது.

-எல்.முருகராஜ்.

Advertisement