இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!

1


சென்னை: சென்னையில் இன்று (பிப்.,28) சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.63 680க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. பிப்.,, 24ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,055 ரூபாய்க்கும், சவரன், 64,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
பிப்.,25ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 8,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 64,600 ரூபாய்க்கு விற்பனையானது.



பிப்.,26ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (பிப்.,27) சவரனுக்கு ரூ.320 சரிந்து, ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று (பிப்.,28) சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.63 680க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,960க்கு விற்பனை ஆகிறது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு, 900 ரூபாய் வரை குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement