72 புது தடங்களில் மினி பஸ் விண்ணப்பிக்க வரும் 10 கடைசி
சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மினி பேருந்து இயங்குவதற்காக புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் மக்கள் பயன்பாட்டிற்காக, பேருந்துகளை இயக்க அனுமதி சீட்டு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை வடக்கு மண்டல வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வடகிழக்கில் புதிதாக ஆறு வழித்தடங்கள், வடக்கில் ஏழு, அம்பத்துாரில் ஒன்பது, பூவிருந்தவல்லியில் ஒன்பது, செங்குன்றத்தில் இரண்டு என, மொத்தம் 33 வழித்தடங்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல், தெற்கு மண்டலத்தில், சோழிங்கநல்லுாரில் புதிதாக 11 வழித்தடங்கள், தெற்கில் ஆறு, தென் மேற்கில் ஒன்பது, மீனம்பாக்கத்தில் 13 என, மொத்தம் 39 வழித்தடங்களில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன.
புதிதாக கண்டறியப்பட்ட, வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில், 72 வழித்தட விபரங்கள் அரசிதழில் வெயிடப்பட்டுள்ளது.
புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இம்மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு வழித்தடத்திற்கு, ஒன்றுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.