ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி திடலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார். த.மு.மு.க., மாவட்ட செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், செயலாளர்கள் பஜில்தீன், ரியாசுதீன், செயற்குழு உறுப்பினர்கள் முகமது ஜக்கரியா, அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் முஸ்தபா, த.மு.மு.க., மாநில செயலாளர் முஸ்தாக்தீன், வர்த்தக அணி மாநில பொருளாளர் அப்துல் ஹக்கீம், வழக்கறிஞர் அலாவுதீன் கண்டன உரையாற்றினர். வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நகர தலைவர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.

Advertisement