போதையில் தகராறு ஒருவர் மீது வழக்கு

திருக்கனுார் : தனியார் கம்பெனி ஊழியர்களிடம் போதையில் தகராறு செய்து தாக்கியவர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 38. இவர், கடந்த 25ம் தேதி, அங்குள்ள தனியார் மருந்து தயாரிப்பு கம்பெனிக்கு, மது போதையில் சென்று, செக்யூரிட்டியிடம் தகராறில் ஈடுபட்டார். அங்கு பணியில் இருந்த சூப்பர்வைசர் கார்த்திகேயன், 38; அவரை கண்டித்தார். இதனால், கோபமடைந்த தமிழ்ச்செல்வன், கார்த்திகேயனை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார், தமிழ்ச்செல்வன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement