மாணவன் மாயம்

ஓசூர்: ஓசூரை சேர்ந்தவர், 11 வயது சிறுவன். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். கடந்த இரு நாட்களாக பள்ளிக்கு செல்லாத மாணவன், அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நின்றிருந்தார்.

மாணவனை கண்டஅவரது சகோதரி அவரை அழைத்த நிலையில், அங்கிருந்து சென்ற மாணவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது தந்தை கொடுத்த புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement