கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கடலுார்; கடலுார் பஸ் நிலையம் அருகில் பேக்கில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில், கலால் சப் இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரித்தபோது, விருத்தாசலம் தாலுகா நாச்சியார்பேட்டை ரஞ்சித்குமார், 29; என்பதும், பேக்கில் 300 கிராம் கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து கடலுார் கலால் போலீசார் வழக்கு பதிந்து, ரஞ்சித்குமாரை கைது செய்து, தப்பியோடிய விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரை இந்தியன் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement