வி.ஏ.ஓ., சங்க பொதுக் குழு  

/ விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டப் பொதுக் குழு கூட்டம் நடந்தது.

வட்ட தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வள்ளல் பாரி, பொருளாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜா வரவேற்றார்.

மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார், துணைத் தலைவர் சரத்யாதவ், நிர்வாகிகள் ஜெயகாந்தன், உதயகுமார், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்ற பணிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்ட பொருளாளர் சத்தியசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement