சுற்றுலா கலைவிழா

மதுரை : சுற்றுலாத்துறை சார்பில் அலங்காநல்லுார் கீழக்கரையில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இன்றும் நாளையும் (மார்ச் 1, 2) கலைவிழா நடத்தப்படுகிறது.

இன்று மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை கானா பாடல்கள், டோல் இசை, நாளை (மார்ச் 2) மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை நையாண்டி மேளம், பூங்கரகம், அடுக்கு கரக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மார்ச் 8 மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை கரகம், தப்பாட்டம், வீணை கச்சேரி, பொய்க்கால் குதிரை ஆட்டம் நடைபெறும். அனுமதி இலவசம்.

Advertisement