பஸ் விபத்தில் 37 பேர் பலி: பொலிவியாவில் போதை டிரைவரால் ஏற்பட்ட சோகம்

2


சுக்ரே: பொலிவியாவில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பஸ் டிரைவர் மது அருந்தியதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.


அந்நாட்டு நேரப்படி, உயினி மற்றும் கொல்சஹ்னி இடையிலான சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. சாலையின் மறுபுறத்தில் வந்த பஸ் ஒன்று, பாதை மாறி வந்து மோதியது. அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 37 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 39 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.


விபத்துக்கு உள்ளான பஸ் ஒன்று அந்நாட்டில் நடக்கும் கார்னிவெல் கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தது. பஸ்சை ஓட்டியவர் மது அருந்தியதாக, பயணிகள் சிலர் போலீசிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement