நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: 'ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அளிக்கிறீர்களே, ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அளிக்க வேண்டியது தானே என்று சில அதி மேதாவிகள் அதிகப்பிரசங்கித்தனமாக கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது கடிதம்:
எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும், தமிழத்திற்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழகம் போராட்டக் களம் காணாமல் இருந்ததில்லை. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக தமிழகத்தின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என கவர்னர் புதுச்சரடு விடுகிறார். எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிகத்திற்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை.
ரூபாய் நோட்டு
ரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியது தானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கத் தனமாகக் கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்? ரூபாய் நோட்டில் ஹிந்தி மட்டுமா உள்ளது? அந்தந்த மாநில மொழிகளுக்குரிய உரிமையை நிலை நிறுத்தும் முறையில், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளன.
மொழி சமத்துவம்
ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரயில்வேயிலும் மத்திய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழி திணிப்பு. பதவி பறிக்கப்பட்டாலும், சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தாலும், உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் ஆதிக்க மொழித் திணிப்புக்கு இடந்தராமல் ஆருயிரான தமிழைக் காப்போம் என்பதில் அப்போதும் இப்போதும் உறுதியாக இருக்கிறது தி.மு.க.,
வடிகட்டிய பொய்
ஹிந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்றும், சமஸ்கிருதமே இந்தியாவின் முதன்மை மொழி என்றும் சொல்லி இரண்டையும் திணிக்க நினைக்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற இரண்டுமே வடிகட்டிய பொய் என்பதை வரலாறு சொல்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.











மேலும்
-
உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவன்!
-
கஞ்சா வழக்கில் கைதுக்கு பின் ஐ.ஐ.டி., பாபா விடுவிப்பு
-
2 மில்லியன் குழந்தைகள் உயிரை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்
-
ராமஜெயம் கொலை வழக்கு; அதிகாரிகள் மாற்றம்
-
அண்ணாமலை - தங்கம் தென்னரசு மோதல்!
-
ஆங்கிலம் பற்றி நீங்கள் பேசலாமா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி