மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குரூ.8 கோடி கடனுதவி வழங்கல்


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குரூ.8 கோடி கடனுதவி வழங்கல்


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் விவசாய தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் நடந்தது. இதில், வங்கி பொது மேலாளர் டில்லியை சேர்ந்த டெபர்சன் சாகு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 8 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், கோவை வட்டார துணை மேலாளர் அரிந்தம் தாஸ் மற்றும் கிருஷ்ணகிரி கிளை மேலாளர் ராஜா ஆகியோர், கடன் வழங்குதல், கடன் பெறுதல், திருப்பி செலுத்துதல், பெற்ற கடனை முறையாக முதலீடு செய்தல் குறித்து விளக்கம் அளித்தனர்.
கிருஷ்ணகிரி பி.டி.ஓ., உமா சங்கர், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், சுய உதவிக்குழுக்கள் தயாரித்த கைவினை பொருட்கள், புடவைகள், பாரம்பரிய உணவு வகைகள், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய
உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

Advertisement