பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!

39


கோவை: கோவையில், பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.



கோவை, பீளமேடு, எல்லை தோட்டத்தைச் சேர்ந்தவர் கீதாரமணி, 56. நேற்று முன்தினம் இரவு, கீதாரமணி வீட்டின் அருகே வளர்ப்பு நாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் இரு பெண்கள் வந்தனர்.

இருவரும், வழி கேட்பது போல கீதாரமணியிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த பெண், கீதாரமணியின் 4.5 சவரன் தாலி செயினை பறித்தார். கீதாரமணி அலறல் சத்தம் கேட்டு, கணவர், மகன் ஓடிவந்து, தப்ப முயன்ற இரு பெண்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



பீளமேடு போலீசார் விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, 37, அபிராமி, 36, என, தெரிந்தது. இவர்கள், சில தினங்களுக்கு முன் துடியலுார் அருகில் ரோட்டில் நடந்த சென்ற மூதாட்டியிடம், செயின் பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement