தனியார் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிட வலியுறுத்தி பிரசாரம்




தர்மபுரி:தனியார் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., சார்பில், மக்கள் சந்திப்பு பிரசாரம், தர்மபுரியில் நடந்தது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜீவா, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் விஜியன், தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பிரசார கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், மத்திய அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான தொகையாக, 7 வருடத்திற்கு மாதம், 80 முதல், 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். அந்த மீட்டருடைய ஆயுட்காலம், 7 வருடம் தான். இதில், ஒவ்வொரு மாதமும், மீட்டர் வாடகை கட்டணமாக, நாம் செலுத்த வேண்டி வரும். அதேபோல், மின் கட்டணத்தை, மின் பயன்பாடு அதிகமுள்ள நேரத்தில் (பீக் அவர்) அதிக கட்டணம் விதிப்பதற்கு உண்டான ஏற்பாடுகள் அந்த மீட்டரில் செய்யப்பட்டுள்ளன. இதனால், மின் கட்டணம் கடுமையாக உயரும். மேலும், மானிய விலை மின்சாரம், விவசாயம் மற்றும் குடிசை
களுக்கான இலவச மின்சாரம் என்பதும் இல்லாமல் போகும் ஆபத்து உள்ளது. எனவே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட,
வலியுறுத்தப்பட்டது.

Advertisement