19,336 மாணவ, மாணவியருக்கு83 மையங்களில் பிளஸ் 2 தேர்வு



19,336 மாணவ, மாணவியருக்கு83 மையங்களில் பிளஸ் 2 தேர்வு


தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், இன்று நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, 19,336 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச், 25 வரை நடக்கவுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, 103 அரசு பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 3 அரசு உண்டு உறைவிடப்பள்ளி, ஒரு சமூக நலப்பள்ளி, 65 தனியார் பள்ளிகள் என, 177 பள்ளிகளை சேர்ந்த, 9,365 மாணவர்கள், 9,971 மாணவியர் என, 19,336 பேர் எழுத உள்ளனர். இதில், 83 தேர்வு மையங்களில் நடக்கும் தேர்வில், 3,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வு சரியாக காலை, 10:00 மணிக்கு தொடங்க உள்ளது. இறுதி நேர பதற்றத்தை தவிர்க்க, மாணவர்கள் தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக, தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வுக்கு வரும் முன், ஹால் டிக்கெட் மற்றும் தேர்வுக்கான உபகரணங்களை சரிபார்த்து கொண்டு வர வேண்டும் என, தேர்வு மைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement