டிரைவரை தாக்கிய மூவர் கைது


டிரைவரை தாக்கிய மூவர் கைது


கிருஷ்ணகிரி:ஓசூர், மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரை சேர்ந்தவர் ராஜசேகர், 27, தனியார் நிறுவன டிரைவர். கடந்த, 28 இரவு, இவர் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த முரளி, 29 மற்றும் சிலர் போதையில் அங்கு வந்தனர். அப்போது ராஜசேகருககும், முரளிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முரளி, அவருடன் வந்த அஜித், 24, சதீஷ்குமார், 25 ஆகியோர், ராஜசேகரை தாக்கினர். அவர் புகார் படி, ஓசூர் சிப்காட் போலீசார், முரளி, அஜித், சதீஷ்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.

Advertisement