ஓசூரில் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை 2 மாதங்களுக்கு இலவச பரிசோதனை முகாம்


ஓசூரில் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை 2 மாதங்களுக்கு இலவச பரிசோதனை முகாம்


ஓசூர்:ஓசூர், பாகலுார் சாலையில் என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில், தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. ஓசூர், தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தலைவர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியாதாவது:-கோவையை தலைமையிடமாக கொண்டு கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய, 3 மாநிலங்களில், 23 இடங்களில் எங்கள் கண் மருத்துவமனை அமைந்துள்ளது. ஓசூரில், 24வது கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் மருத்துவமனை திறப்பு விழா சலுகையாக பொதுமக்களுக்கு மார்ச் மற்றும் ஏப்., என, 2 மாதங்கள் முழுவதும் இலவசமாக கண் பரிசோதனை செய்து கொள்ளலாம். 40 ஆண்டு சேவையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றோம். ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் தொடர்ந்து ஏழைகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை மூகாம் நடத்தி நோய்களைகண்டறிந்து ஆலோசனை வழங்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.நிர்வாக இயக்குனர் ஸ்ரேயஸ் ராமமூர்த்தி, மருத்துவ இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி, இந்திய மருத்துவர் சங்கத்தின் ஓசூர் கிளைத்தலைவர் சீனிவாசன், ஷசூர் தொழில் சங்கத்தின் தலைவர் சுந்தரய்யா, தொழிலதிபர்கள் ராஜாரெட்டி, நாராயணன் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.

Advertisement