முதல்வர் பிறந்த நாள்2,000 பேருக்கு மரக்கன்று


முதல்வர் பிறந்த நாள்2,000 பேருக்கு மரக்கன்று

ஓசூர்: ஓசூர், மத்திகிரி கூட் ரோடு பகுதியில், மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தொழிலாளரணி அமைப்பாளர் கே.ஜி., பிரகாஷ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் தலைமை வகித்து, 2,000 பேருக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
மாவட்ட துணை செயலாளர் புஷ்பா சர்வேஷ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் திம்மராஜ், மாநகராட்சி கவுன்சிலர் மாதேஸ்வரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கோபால் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.

Advertisement