பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்


பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (3ம் தேதி) துவங்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 22,180 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று (3ம் தேதி) துவங்கி வரும், 25 வரை நடக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும், 5ல், துவங்கி, 27 வரை நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாண்டு மாவட்டத்திலுள்ள, 197 அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 10,409 மாணவர்கள், 11,540 மாணவியர் என, 21,949 மாணவ, மாணவியரும், 231 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் என, மொத்தம், 22,180 மாணவ, மாணவியர், 87 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

Advertisement