சாப்ட்வேர் இன்ஜினீயர் உட்பட 2 பேர் பலி


சாப்ட்வேர் இன்ஜினீயர் உட்பட 2 பேர் பலி


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில், சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் பள்ளி அடுத்த தேவீரஹஅள்ளியை சேர்ந்தவர் மூர்த்தி, 32. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை சின்னமுத்துார் அருகே கே.ஆர்.பி. அணை சாலையில் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது எதிரில் வந்த பல்சர் பைக் மோதி படுகாயமடைந்து பலியானார். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம் போலீசார் விசாரிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலையை சேர்ந்தவர் ஹரீஷ், 26. இவர் பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் தங்கி,
பெங்களூரு ஐ.டி., நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் காலை, யமஹா பைக்கில் கிருஷ்ணகிரி நோக்கி
வந்துள்ளார். குருபரப்பள்ளி சோமநாதபுரம் பாலம் அருகில் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது, பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த ஹரீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement