முதியவர், இளம்பெண் மாயம்


முதியவர், இளம்பெண் மாயம்


ஈரோடு,:ஈரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, ஸ்வஸ்திக் காம்ப்ளக்சை சேர்ந்தவர் நடராஜன், 71; கைகாட்டி வலசில் உள்ள தனியார் நிறுவன காவலாளி. கடந்த, 28ம் தேதி மதியம் வேலைக்கு கிளம்பியவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது மகன் புவனேஸ்வரன் புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு, மாரப்ப கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சங்கர். கார் டிரைவரான இவரின் மனைவி தேன்மொழி, 29; தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த, 28ல் சங்கர் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது மனைவியை காணவில்லை. சங்கர் புகாரின்படி ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், தேடி வருகின்றனர்.

Advertisement