குடிபோதை 'டிரைவிங்' 250 பேர் உரிமம் ரத்து


குடிபோதை 'டிரைவிங்' 250 பேர் உரிமம் ரத்து


ஈரோடு,:ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதன்படி கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 95 பேர் மீது வழக்கு, ஓட்டுனர் உரிமம் இல்லாததால், 12 வழக்கு, ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 558 வழக்கு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக, 13 வழக்கு, மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 36 வழக்கு என பல்வேறு பிரிவுகளில், 1,027 வழக்குகள் பதிவு செய்து, அபராத தொகையாக, ௨.௭௦ லட்சம் ரூபாய் வசூலித்தனர்.
கடந்த இரு மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 250 வழக்குகள் பதிவு செய்து, இவர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement