உழவர் சந்தைகளுக்கு74 டன் காய்கறி வரத்து


உழவர் சந்தைகளுக்கு74 டன் காய்கறி வரத்து


ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, பெருந்துறை, சத்தி, கோபியில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 32.78 டன் காய்கறி, பழங்கள் வரத்தானது. இதன் மதிப்பு, 11.௫௩ லட்சம் ரூபாய். மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளுக்கும் மொத்தமாக, 74 டன் காய்கறி, பழங்கள் வரத்தானது. இதன் மதிப்பு, 25.93 லட்சம் ரூபாய். உழவர் சந்தைகளுக்கு, 11,217 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர்.

Advertisement