நுழைவுச்சீட்டு பரிசோதனைக்கு பிறகேகொடிவேரியில் பயணிகள் அனுமதி

நுழைவுச்சீட்டு பரிசோதனைக்கு பிறகேகொடிவேரியில் பயணிகள் அனுமதி

கோபி,:கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டும் தண்ணீரில் குளிக்க, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒருவருக்கு நுழைவு கட்டணமாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதையும் செலுத்தாமல் அரசியல் கட்சியினர், அரசு துறையினர் தடுப்பணைக்கு சென்று குளித்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், தவறாமல் நுழைவுச்சீட்டு பெற்று செல்லவும், பரிசோதனைக்கு உட்பட்டது' என அறிவிப்பு செய்து, நுழைவு வாயிலில் நீர்வளத்துறையினர் அறிவிப்பு வைத்துள்ளனர். மேலும் தடுப்பணைக்கான நுழைவுச்சீட்டு, வாகனங்கள் நிறுத்த நுழைவுச்சீட்டு ஆகிய பணிகளுக்கு, மூன்று பணி ஆய்வாளர் தலைமையில், 12 ஊழியர்கள், சுழற்சி முறையில், நேற்று முன்தினம் முதல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி வார விடுமுறை நாளான நேற்று, தடுப்பணைக்குள் நுழைந்த சுற்றுலா பயணிகள், நுழைவுச்சீட்டு பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். தடுப்பணை வழியாக, 128 கன அடி வெளியேறிய தண்ணீரில், சுற்றுலா பயணிகள் நேற்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement