மரத்தை முறித்து போட்ட யானை மலைப்பாதையில் 'டிராபிக் ஜாம்'


மரத்தை முறித்து போட்ட யானை மலைப்பாதையில் 'டிராபிக் ஜாம்'


அந்தியூர்,:அந்தியூரை அடுத்த பர்கூர்மலை பாதையில், கர்ககேண்டி செல்லும் சாலையில், நேற்று காலை ஒரு ஆண் யானை வந்தது. திடீரென சாலையை ஒட்டி வளர்ந்திருந்த சிறு மரத்தை சாவகாசமாக தும்பிக்கையால் இழுத்து முறிக்க, சாலையின் குறுக்கே கச்சிதமாக சாய்ந்து விழுந்தது. அத்தோடு யானை செல்லாமல், மரத்தின் பின்னால் மறைந்தபடி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல தயங்க, போக்குவரத்து பாதித்து, மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரத்துக்குப் பிறகு வனப்பகுதிக்குள் தானாக யானை சென்றது. இதையடுத்து வாகன ஓட்டிகளில் சிலர் மரத்தை அப்புறப்படுத்த போக்குவரத்து தொடங்கியது.

Advertisement