குடிபோதையால் கணவனை பிரிந்த காதல் மனைவிகுழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு குமுறல்
குடிபோதையால் கணவனை பிரிந்த காதல் மனைவிகுழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு குமுறல்
ஈரோடு,:பவானி, காடையாம்பட்டி, காமாட்சி வீதி, செங்காட்டு தோட்டத்தை சேர்ந்த தமிழரசு மகள் மைதிலி, 25; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
என் பெற்றோருடன் தற்போது வசிக்கிறேன். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறேன். திண்டுக்கல், வத்தலகுண்டை சேர்ந்தவர் திவாகர், 27; காதலித்த நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டேம். திவாகர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். மூன்றாண்டுகள் அவருடன் வாழ்ந்தேன். எங்களுக்கு
மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. போதை பழக்கம், மது குடிக்கும் பழக்கத்தால் என்னை அடித்து துன்புறுத்தியதால், ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து பெற்றோருடன் உள்ளேன். என் குழந்தை கணவரிடம் உள்ளது.
என் குழந்தையை என்னிடம் ஒப்படைக்க கோரி கடந்த பிப்.,10 மற்றும் 17ல் ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுத்தேன். இம்மனு பவானி போலீசுக்கு சென்றது. போலீசார் பிப்.,27ல் விசாரணை நடத்தினர். பிப்.,28ல் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையை ஒப்படைப்பதாக என் கணவர் ஒப்புக்கொண்டு எழுதி கொடுத்தார். அதன்படி அவர் செய்யவில்லை. என் கணவர் மறுமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனால் என் குழந்தையின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. குழந்தையை மீட்டு என்னிடம் தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
மைதிலி மனு அளிக்க வந்தபோது எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் அலுவலகத்துக்கு வரவில்லை. இதனால் அங்கிருந்த போலீசார் நாளை (இன்று) காலை மனு அளிக்க வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு