மாவட்டத்தில் 22,424 மாணவர் பங்கேற்கும்பிளஸ் 2 தேர்வு 108 மையங்களில் தொடக்கம்


மாவட்டத்தில் 22,424 மாணவர் பங்கேற்கும்பிளஸ் 2 தேர்வு 108 மையங்களில் தொடக்கம்


ஈரோடு,:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில், 108 தேர்வு மையங்களில் 22,424 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இன்று மொழி பாடத்தேர்வு நடக்கிறது. ஈரோடு, கோபி, அந்தியூர், தாளவாடி ஆகிய நான்கு இடங்களில் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 108 தேர்வு மையங்களுக்கும் தலா ஒருவர் என, 108 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இது தவிர வினாத்தாள் வழங்கல், விடைத்தாள் பெறுதல் பணிக்கு, 27 வழித்தடம் அமைக்கப்பட்டு, 27 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். விடைத்தாள் பரிமாற்றம், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனி தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது.

Advertisement