மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி


மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி


ஆத்துார்:ஆத்துார் அருகே செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 48. எலக்ட்ரீஷியனான இவர், நேற்று சீலியம்பட்டியை சேர்ந்த முருகன், 59, தோட்டத்தில், பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய, 3 தொழிலாளர்களுடன் சென்றார். மதியம், 1:30 மணிக்கு மின்சாரத்தை அணைக்காமல், மின்மோட்டாரை எடுத்து ஒயர் இணைப்பு கொடுத்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து, சக்திவேல் துாக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement