புது ரக நெல் அறிமுகம்விவசாயிகளுக்கு அழைப்பு
புது ரக நெல் அறிமுகம்விவசாயிகளுக்கு அழைப்பு
வீரபாண்டி:வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக நெல் ஏ.டி.டீ., 56 ரகத்தை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதை, 110 முதல், 115 நாட்களில் அறுவடை செய்ய முடியும். கார், குறுவை, சொர்ணவாரி, நவரை பருவங்களுக்கு ஏற்றது. கோ 51 ரகத்தை விட, 10 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும். இது நடுத்தர சன்ன ரக அரிசி. முழு அரிசியை விட அதிக அரவை திறன் உடையது. நடுத்தர அளவில் அமைலோஸ் கொண்டது. குலை நோய், உறை கருகல், பாக்டீரியா இலை கருகல் நோய்களை மிதமாக எதிர்த்து வளரும் சக்தி கொண்டது. இலை சுருட்டுப்புழு, ஆணைக்கொம்பன் ஈ, புகையான், பச்சை தத்துப்பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. விவசாயிகள் புது ரக நெல் ஏ.டி.டீ., 56 சாகுபடி செய்து பயன்பெற வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement