தீயணைப்பு நிலையஅலுவலகம் இடமாற்றம்


தீயணைப்பு நிலையஅலுவலகம் இடமாற்றம்


ஓமலுார்:ஓமலுார் தாலுகாவில் இருந்து, 2016ல் காடையாம்பட்டி தாலுகா உருவாக்கப்பட்டது. 2020 ஜன., 29ல் புதிதாக காடையாம்பட்டி தீயணைப்பு நிலையம் உதயமானது. அன்று முதல் நாச்சனம்பட்டி பிரிவு சாலை, டி.வி.எஸ்., நகரில் உள்ள தனியார் கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டது. இந்நிலையில், தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை, தீவட்டிப்பட்டி சர்வீஸ் சாலையில் உள்ள புது கட்டடத்துக்கு, நேற்று முதல், அலுவலகம் இடமாற்றப்பட்டது. இங்கு வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தவும், வீரர்கள் தினமும் பயிற்சி பெறவும், அவசர காலத்தில் விரைந்து செயல்படவும் வசதி உள்ளது என, நிலைய அலுவலர் ராஜசேகரன் தெரிவித்தார்.

Advertisement