11 குழந்தைகளுக்குதங்க மோதிரம் பரிசு

11 குழந்தைகளுக்குதங்க மோதிரம் பரிசு


மேட்டூர்:தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளான நேற்று முன்தினம், மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 11 குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு, தி.மு.க., சார்பில் சேலம் எம்.பி., செல்வகணபதி நேற்று மதியம், தலா ஒரு கிராம் தங்க மோதிரத்தை, பரிசாக வழங்கி குழந்தைகளுக்கு அணிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, மேட்டூர் நகர செயலர் காசி விஸ்வநாதன், நகர தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement