வெயில் அதிகரிப்பால் தர்பூசணி குவிப்பு


வெயில் அதிகரிப்பால் தர்பூசணி குவிப்பு


வாழப்பாடி:கோடை காலத்துக்கு முன்பே, சேலம் மாவட்டத்தில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில், சாலையோரங்களில் தர்பூசணி கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன. ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரி மணி, 45, கூறுகையில், ''வழக்கமாக சித்திரை, வைகாசியில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கும். நடப்பாண்டில் தற்போதே வெயில் அதிகரித்ததால் திண்டிவனம், விழுப்புரம், உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதி விவசாயிகளிடம் கிலோ, 8 ரூபாய்க்கு தர்பூசணி இறக்குமதி செய்து, சேலத்தின் பல்வேறு இடங்களில் விற்கின்றனர். தரத்தை பொறுத்து கிலோ, 15 முதல், 25 ரூபாய்க்கு, வியாபாரிகள் விற்கின்றனர். வெயிலால் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது,'' என்றார்.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை அயோத்தியாப்பட்டணம் உதவி அலுவலர் விஜயகுமார் கூறுகையில், ''வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில் கடந்தாண்டு, 500 ஏக்கர் வரை தர்பூசணி பயிரிடப்பட்டது. ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து தர்பூசணி சாகுபடிக்கு ஆர்வம் காட்டவில்லை. நடப்பாண்டு, 200 ஏக்கர் வரை மட்டும் சாகுபடி செய்துள்ளனர். இந்த பழங்கள், அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும்,'' என்றார்.

Advertisement