காவிரி கரையோர கிராமங்களில்கோடை நெல் சாகுபடி ஆரம்பம்


காவிரி கரையோர கிராமங்களில்கோடை நெல் சாகுபடி ஆரம்பம்


மேட்டூர்:கொளத்துார் ஒன்றியம் நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிகள், காவிரி கரையோரம் உள்ளன. அதில் நவப்பட்டியில், 1,063, கோல்நாயக்கன்பட்டியில், 688 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாயில் நீர் திறக்கப்பட்டதால் நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டியில், விவசாயிகள், 1,250 ஏக்கரில் பொன்னி நெல் சாகுபடி செய்தனர். அதன் அறுவடை முடிந்து கோடைகாலம் தொடங்கும் நிலையில் இரு ஊராட்சிகளிலும் விவசாயிகள் கோடை சாகுபடிக்கு ஆயத்தமாகியுள்ளனர். அதற்கு நிலங்களை உழுது, நெல், வேர்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதற்கான முதல்கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர்.

Advertisement