நீலகிரி எக்ஸ்பிரஸில் ஜெர்மன் பெட்டி
நீலகிரி எக்ஸ்பிரஸில் ஜெர்மன் பெட்டி
சேலம், ரயில்வே சார்பில் முக்கிய தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் உள்ள சாதாரண பெட்டிகளை மாற்றி, இந்தியாவில் தயாரிக்கப்படும், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்று முதல், எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்படும். அதன் மறுமார்க்க ரயிலில், நாளை முதல், இப்பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த பெட்டிகளில் வழக்கத்தைவிட கூடுதலான பயணியரை ஏற்றலாம். அழகியல் ரீதியாக சிறந்த உட்புறங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியும் அதிவேகத்தில் திறமையான பிரேக்கிங், உட்புறங்களுக்கு மேம்பட்ட நியூமேடிக் டிஸ்க் பிரேக் அமைப்பு, தீ தடுப்பு கருவிகளை கொண்டுள்ளன. 'ஏர் கண்டிஷனிங்' அமைப்பு அதிக திறன் கொண்டது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு