பேச்சில் உடன்பாடு ஏற்படாததால்3ம் நாளாக போராட்டம் நீடிப்பு


பேச்சில் உடன்பாடு ஏற்படாததால்3ம் நாளாக போராட்டம் நீடிப்பு


மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையங்கள், மின்பகிர்மான வட்டம், நீர்மின் உற்பத்தி நிலையங்களில், பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில், 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் கடந்த பிப்., 28ல், வேலையை புறக்கணித்து, அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்கழகம், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மின்கழகம் நேரடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 3ம் நாளாக போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. 40 பெண்கள் உள்பட, 200 பேர் பங்கேற்றனர்.
மதியம் சேலம் கூடுதல் கலெக்டர் பொன்மணி(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்தது.

Advertisement