கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சகோதரர் மகனை நீக்கினார் மாயாவதி அரசியல் வாரிசே தேவையில்லை என ஆவேசம்

லக்னோ,
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தன் அரசியல் வாரிசாக அறிவித்த சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை, கட்சி யின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வரான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார்.
இவரது சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் என்பவரை, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மாயாவதி அறிவித்து இருந்தார்.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, ஆகாஷ் ஆனந்தின் பதவியை பறித்த மாயாவதி, ஜூலையில் மீண்டும் பதவியை கொடுத்தார்.
அப்போது, ஆகாஷ் ஆனந்தை, தன் அரசியல் வாரிசாகவும் அறிவித்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டார்.
இதன்பின், மாயாவதி கூறியதாவது:
நான் உயிருடன் இருக்கும் வரை, என் அரசியல் வாரிசை அறிவிக்கப் போவதில்லை. இந்த கட்சியும், இயக்கமும் தான் எனக்கு முதன்மையானது. உறவினர்கள் அதற்கு பிறகு தான்.
ஆகாஷ் ஆனந்த் பதவி நீக்கப்பட்டதற்கு அவரது மாமனாரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான அசோக் சித்தார்த் தான் காரணம். அவர், கட்சியில் பிளவு ஏற்படுத்தியதுடன் பலவீனப்படுத்தவும் முயன்றார். அதோடு ஆகாஷ் ஆனந்தின் அரசியல் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி விரோத நடவடிக்கையில் அசோக் சித்தார்த் ஈடுபட்டதற்காக, கட்சியில் இருந்து அவரை, மாயாவதி கடந்த மாதம் நீக்கினார்.
நேற்றைய கூட்டத்துக்கு பின், தன் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ராம்ஜி கவுதம் ஆகியோரை தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துஉள்ளார்.
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு