சசி தரூர் செயல்பாடுகள்: ராகுல் கடும் எச்சரிக்கை

2

புதுடில்லி: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.


இங்கு, சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாத காங்கிரஸ், இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.


இந்நிலையில் கேரளாவின் ஆளுங்கட்சியை பாராட்டி பேசிய காங்., - எம்.பி., சசி தரூர், அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்ததையும் பாராட்டினார். இதனால், கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் சசி தரூரை கடுமையாக விமர்சித்தனர்.



சசி தரூருக்கு ஆதரவாகவும் சிலர் வரிந்து கட்டினர். கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், கட்சி மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், அக்கட்சி எம்.பி., ராகுல் டில்லியில் ஆலோசனை நடத்தினார்.


அப்போது, 'தலைவர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும்; கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ராகுல் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

Advertisement