கஞ்சா வழக்கில் கைதுக்கு பின் ஐ.ஐ.டி., பாபா விடுவிப்பு

புதுடில்லி: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஐ.டி., பாபா பின்னர் விடுவிக்கப்பட்டார்.
'ஐஐடி பாபா' அபய் சிங் யார்?
ஐ.ஐ.டி., பாபா அபய் சிங் ஒரு ஐ.ஐ.டி- மும்பை முன்னாள் மாணவர் மற்றும் முன்னாள் விண்வெளி பொறியாளர். துறவியாக மாறிய அவரது செயல்பாடுகள், கும்ப மேளாவில் அனைவரையும் கவர்ந்தன.
மகா கும்பமேளாவில் 'ஐஐடி பாபா' என்ற பெயரில் பிரபலமடைந்த அபய் சிங், சத்தியத்தைத் தேடி அங்கு சென்றதாகக் கூறினார்.
ரித்தி சித்தி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தகராறு செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து ஐ.ஐ.டி., பாபா கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடமிருந்து கஞ்சாவை மீட்டனர், இருப்பினும் அது மிகக் குறைந்த அளவே இருந்தது.
கஞ்சா அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்ததால், சிறிது நேர காவலுக்குப் பிறகு போலீசார் அவரை விடுவித்தனர். ஐ.ஐ.டி., பாபா அளித்த பேட்டி:
நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போலீசார் வந்து என்னைக் கைது செய்தனர். இது ஒரு விசித்திரமான சாக்குப்போக்கு என்று நான் நினைத்தேன். கும்பமேளாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பாபாவும் கஞ்சாவை பிரசாதமாக உட்கொள்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கைது செய்வார்களா?"
இன்று எனது பிறந்தநாள், இன்று நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு ஐ.ஐ.டி., பாபா கூறினார்.