கனடா, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு அமல்

வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு, கூடுதலாக 25% வரி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா, சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.
வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 35 சதவீதமும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற பின் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார். பின் ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று நாடுகளுக்குமான வரி விதிப்பு, இன்று (மார்ச் 4) முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 'மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து அதிக அளவிலான போதைப் பொருட்கள் அமெரிக்காவுக்குள் வருகின்றன. 'இந்த போதை அரக்கனால் அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, இந்த போதை வினியோகம் முற்றிலும் நிற்கும் வரை அல்லது தீவிர கட்டுப்பாட்டுக்கு வரும் வரை இந்த வரி விதிப்பு தொடரும்' என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா, சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.
அமெரிக்கா எந்த அளவுக்கு வரி விதித்ததோ அதே அளவுக்கு கனடாவும் அமெரிக்க பொருளுக்கு வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா 10 முதல் 15 சதவீதம் வரை வரி விதித்துள்ளது. அமெரிக்காவில் பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன.
அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகள் மீது ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரி அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (1)
hariharan - coimbatore,இந்தியா
04 மார்,2025 - 13:35 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement