வைகுண்டர் கருத்துகளைப் பின்பற்றி ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம்; அண்ணாமலை

சென்னை; அய்யா வைகுண்டர் கருத்துகளைப் பின்பற்றி ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம்;
ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளை போதித்து, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் அய்யா வைகுண்டர் அவர்களின் 193வது அவதார தினத்தைக் கொண்டாடும் உலகளாவிய பக்தர்கள் அனைவருக்கும், தமிழக பா.ஜ., சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்ற ஞானத்தைப் போதித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர்.
உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் வலியுறுத்தி, மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் போன்ற அறநெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர்.
அதிகாரத்துவம், சமூக ஏற்றத்தாழ்வு, கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், அய்யா வைகுண்டர் அவர்களின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாக இருக்கிறது.
அய்யா வைகுண்டர் அவதார தினமான இன்று, அவரின் கருத்துகளைப் பின்பற்றி, அவர் காண விரும்பிய, ஏற்றத்தாழ்வற்ற, அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம். அய்யா உண்டு!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும்
-
இந்தியா சந்திக்கும் சவால்கள்: ராஜ்நாத் சிங் பட்டியல்
-
சென்னை ஐகோர்ட்டிற்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
-
கவிஞர் நந்தலாலா காலமானார்
-
தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறவில்லை; இ.பி.எஸ்.
-
சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டி; 2 விக்கெட்களை இழந்தது ஆஸி.,
-
2026ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி; அடித்து சொல்கிறார் இபிஎஸ்!