சேதமான ரோடுகளை சீரமைப்பதில் கவனம் செலுத்தலாமே: மேடு, பள்ளங்களால் தொடர்கிறது விபத்து

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரோடுகளில் ஆபத்தான பள்ளங்களுடன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடு சேதமடைந்துள்ளது.
இதுபோன்று ரோடுகளில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் உள்ளனர். கிராம ரோடுகள் முதல் நகர், மலை பகுதி, நெடுஞ்சாலை ரோடுகள் என அனைத்து வகையான ரோடுகளிலும் இதுபோன்ற பள்ளங்கள் உள்ளன. பெரும்பாலான பாலங்கள், மேம்பாலங்களில் ஆபத்தான பள்ளங்களும், மழைநீர் வெளியேறுவதற்காக வைக்கப்பட்டுள்ள துவாரங்களில் குழந்தைகள் விழும் அளவிற்கு பெரிய அளவில் உள்ளது.இது ரோட்டில் நடந்து செல்லும் சிறுவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இது போன்ற துவாரங்களில் சிறுவர்கள் உள்ளே விழுந்துவிடாத வண்ணம் வலைகள் அமைக்க வேண்டும். மழையின் போது இது போன்ற பள்ளங்களில் டூவீலர் முதல் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்களில் சிக்குவதும், சிறுகாயங்கள் முதல் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது.குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரோடுகளில் உள்ள ஆபத்தான பள்ளங்கள் தெரியாததால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் செல்வதாலும், தரமற்ற ரோடு பணிகளால் ரோடுகளில் தண்ணீர் தேங்குவதாலும் ரோடுகள் சேதமாகிறது.மாவட்டம் முழுவதும் உள்ள சேதமடைந்த ரோடுகளை கண்டறிந்து உடனடியாக சீரமைப்பது அவசியமாகிறது. துறை அதிகாரிகளும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனா பொருட்களுக்கு பரஸ்பர வரி; அதிபர் டிரம்ப் பேச்சு
-
சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் 'குருவி'கள் கைது
-
ரூ.30 கோடி வருமானம் ஈட்டிய படகு உரிமையாளர்! கும்பமேளா வெற்றிக்கதை சொன்ன யோகி ஆதித்யநாத்
-
ரோந்து செல்ல படகுகள் இல்லை: மீனவர்களிடம் கையேந்தும் போலீஸ்!
-
ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு விசாரணை அறிக்கை வழங்க இயலாது; ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்
-
அய்யா வைகுண்டர் சுவாமி 193வது அவதார தின விழா