அய்யா வைகுண்டர் சுவாமி 193வது அவதார தின விழா

ஓசூர்: ஓசூர், சென்னத்துார் அய்யா வைகுண்டர் நகரில், ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் உள்ளது. இங்கு, அய்யா வைகுண்ட சுவாமியின், 193வது அவதார தின விழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு திருவிளக்கு பணிவிடை பூஜை, 9:00 மணிக்கு திருநடை திறப்பு, பெரிய உகப்படிப்பு, 10:00 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. ஓசூர் அன்புபதி தலைவர் ரவிக்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 11:00 மணிக்கு காப்பு, தாலாட்டு, பள்ளியுணர்த்தல், நண்பகல், 12:00 நடை திறப்பு, உச்சிப்படிப்பு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, இரவு, 7:00 மணிக்கு அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றி வலம் வந்தார்.

Advertisement