பழநி மாரியம்மன் கோயிலில் மாசி விழா கொடியேற்றம்

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று இரவு கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் நடைபெற்றது.

பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பிப்.21 இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. பிப்.,25 ல் கம்பம் நடுதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் பால், மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். நேற்று (மார்ச் 4 ) யாக பூஜைகள் நடைபெற்றது. சூரியன் சந்திரன் சிம்ம வாகனத்தில் அம்மன் லிங்க வடிவம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது.

கொடிக்கம்பத்தின் முன் அம்மன் எழுந்தருளினார். கொடி கம்பத்தில் கொடியேற்றம் இரவு ஏழு முப்பது மணிக்கு நடந்தது. நேற்று முதல் சித்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, காணியாளர் ராஜா ,கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி பங்கேற்றனர். மார்ச் 11 ல் அம்மனுக்கு திருக்கல்யாணம், மார்ச் 12 மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 13 இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Advertisement