வெயில் தாக்கம் அதிகரிப்பால் வெறிச்சோடிய வைகை அணை பூங்கா

ஆண்டிபட்டி: வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளதால் வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி உள்ளது.

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை மற்றும் பூங்கா உள்ளது. தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல், கேரளா சுற்றுலா வரும் பயணிகள் வைகை அணை பார்த்துச் செல்ல தவறுவதில்லை. பரந்து விரிந்த வைகை

அணையின் நீர்த்தேக்கம், அணையின் வலது இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் சில மணி நேரங்கள் பொழுதுபோக்கும் முக்கிய இடங்களாக உள்ளன. பூங்காவின் பல்வேறு இடங்களில் உள்ள மரம் செடி கொடிகள், புல் தரைகள் எல்லா பயன்கள் ரசிப்பதற்கு ஏற்றவையாக இருக்கும். மழைக்குப்பின் பனியின் தாக்கமும் குறைந்து தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கத்தால் வைகை அணை மற்றும் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வுகள் துவங்கி உள்ளதால் மாணவ, மாணவிகள் வருகையும் குறைந்து அனைத்து இடங்களும் வெறிச்சோடி உள்ளது.

Advertisement