விரிவாக்க மையங்களில் விதை, உரம் தர ஆய்வு

தேனி: மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் 8 வேளாண் விரிவாக்க மையங்கள், 13 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன.

இங்கு விவசாயிகளுக்கு தேவையான நெல், பயறுவகை, எண்ணெய் வித்து விதைகள், உயிர்உரம், நுண்ணுாட்ட உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் உரங்கள், விதைகள் தரம் குறித்து மதுரை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் பரமேஸ்வரன் தலைமையிலான வேளாண்துறையினர் ஆண்டிபட்டி, தேனி, கோடபட்டியில் செயல்படும் விரிவாக்க மையங்களில் ஆய்வு செய்தனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஆய்விற்கு எடுத்து சென்றனர்.

ஆய்வின் போது தேனி மாவட்ட வேளாண் துறையினர் உடனிருந்தனர்.

Advertisement