தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்

தேனி: உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கல்வி உதவித்தொகை, திருமண, இயற்கை மரண, நோய் பாதிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் இன்று(மார்ச் 5) முதல் மார்ச் 7 வரை சிறப்பு முகாம் நடக்கிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement