தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் தேர்வு

ஓசூர்: தமிழ்நாடு பிராமணர் சங்கம், 'தாம்பிராஸ்' கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தேர்தல், ஓசூரில் நேற்று நடந்தது. இதில், ஓசூர் கிளைத்தலைவராக உள்ள நாகராஜன், மாவட்ட தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மாதவராமன், புதிய தலைவர் நாகராஜனுக்கு, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிளை தலைவர்கள் நாகராஜன் (கிருஷ்ணகிரி), சுரேஷ் (சிங்காரப்பேட்டை), சுனில்குமார் (தளி), ஓசூர் கிளை நிர்வாகிகள் சீனிவாசன், ராமன், குமார், பாலசுப்ரமணியன், கிருஷ்ணசாமி மற்றும் மாநில அமைப்பு செயலாளர் குமார், சேலம் மாவட்ட தலைவர் குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர். அடுத்த, 5 ஆண்டுகளுக்கு நாகராஜன் தலைவர் பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement