கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 3 பேர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் எ.புதுக்கோட்டை நேருநகரைச் சேர்ந்தவர் பெயின்டர் மாயக்கண்ணன் 40.

வேலை முடிந்து கும்பக்கரை ரோடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் 32. இவரது நண்பர்கள் விக்னேஷ் 28. வேல்முருகன் 31 ஆகியோர் ஒரே டூவீலரில் வந்து மாயக்கண்ணனை வழிமறித்தனர். சட்டைப்பையில் இருந்து பணத்தை எடு என மிரட்டினர். தன்னிடம் பணம் இல்லை என மாயக்கண்ணன் தெரிவித்துள்ளார். மூன்று பேரும் மாயக்கண்ணனை அடித்து கீழே தள்ளினர். சிவக்குமார் கத்தியால் மாயக்கண்ணனை குத்தினார். அவரிடமிருந்து அலைபேசி, ரூ.600 யை பறிமுதல் செய்தனர். காயம்பட்ட மாயக்கண்ணன் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வடகரை எஸ்.ஐ., விக்னேஷ், சிவக்குமார் உட்பட மூவரையும் கைது செய்தார்.-

Advertisement