சாலை விழிப்புணர்வு போட்டி

தேனி: போடி அரசு பொறியியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன. நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட திட்ட மாணவ, மாணவிகள் கட்டுரை,பேச்சு, கவிதை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.

கட்டுரைப் போட்டியில் மகாலட்சுமி, ஜிதேஷ், சத்தியா, ஹரிஹரன், விஷ்ணுபிரியா, மகிமா ஆகியோர் வெற்றி பெற்றனர். பேச்சுப் போட்டியில் மனிஷா, திவ்யா, பிரியதர்ஷனி, ஓவிய போட்டியில் ஸ்ரீநிதி, பாண்டிமுருகன், ஸ்ரீராம் ஆகியோர் வெற்றி பெற்றனர். பேராசிரியர்கள் ராதா, கலைவாணி, முத்துக்குமரன்,ராஜமாடசாமி ஆகியோர் பங்கேற்றனர். பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement